ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (15:23 IST)

விஜய் மகனுக்கு ஜோடியாகும் தேவயானியின் மகள்? பிரபல இயக்குனர் தகவல்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
 
அண்மையில் கூட சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார்.  இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும் சஞ்சய்யை ஹீரோவாக வைத்து படம் இயக்க, இயக்குனர்கள் அல்போன்ஸ் புத்ரன், சுதா கொங்கரா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் ஆகியவர்கள் முயற்சி செய்ததாகவும், ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் இயக்கத்தில்தான் தனக்கு முழு ஈடுபாடு என சஞ்சய் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
தொடர்ந்து அவ்வப்போது சஞ்சய் குறித்து ஏதேனும் செய்தி வெளியானால் அது அவரது அப்பாவுக்கு ஈடாக சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிடும். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில்,  தன்னுடைய இரண்டாம் மகள் இனியா விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்கவைக்க போவதாகவும் தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார். 
 
மேலும் பேசிய அவர்  ’நீ வருவாய் என’ படத்தில் முதலில் அஜித், விஜய் தான் இணைந்து நடிக்கவிருந்தார்கள். ஆனால் அது நடிக்கமால் போக பின்னர் பார்த்திபன் நடித்திருந்தார். எனவே நான் இயக்கபோகும் அப்படத்தின் இரண்டாம் பக்கத்தில் விஜய்யின் மகனையாவது நடிக்க வைக்கலாம் என்று விஜய்யிடம் நேரடியாக கேட்கப்போவதாகவும் கூறியுள்ளார்.