1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (14:29 IST)

கண் தானம் செய்த விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், சமூக நலத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். 


 
 
சமீபத்தில், சினிமா துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கினார்.
 
இந்நிலையில், பிரபல தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்த் பங்கேற்றனர். 
 
இதில் மருத்துவமனையை திறந்து வைத்த விஜய் சேதுபதி, தனது கண்ணை தானமாக கொடுப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களையும் கண் தானம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.