1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (08:23 IST)

அட சீரியலுக்கும் வந்துட்டாரா விஜய் சேதுபதி?.. இணையத்தில் வைரலான வீடியோ!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.

இப்படி படங்களில் நடிக்கவே முடியாமல் பிஸியாக இருக்கும் அவர் இப்போது தொலைக்காட்சி சீரியலிலும் கால்பதித்துள்ளார். ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலின் வர இருக்கும் எபிசோட்டில் ஒரு முக்கியமான பரபரப்பான கட்டத்தில் நாயகனுக்கு தொலைபேசி வழியாக பேசி உதவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆனால் அதில் அவரின் குரல் மட்டுமே இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)