திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (15:17 IST)

முரளிதரன் படத்தில் நடிச்சே தீருவேன்! - விஜய் சேதுபதி உறுதி!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிப்பது உறுதி என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800”ல் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில், இலங்கை போரில் ஈழ தமிழர்களுக்கு எதிராக பேசிய முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

முத்தையா முரளிதரன் தான் தமிழர்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை என விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விஜய் சேதுபதி “800 படத்தின் கதையை கேட்டு பிடித்து போனதால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எந்த விதமான அரசியலும் இல்லை. இப்போது எழுந்துள்ள பல கேள்விகளுக்கு இந்த படம் நிச்சயம் பதிலளிக்கும். இந்த படத்திலிருந்து விலகும் எண்ணம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.