திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (11:44 IST)

ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார் விஜய் சேதுபதி?

‘ஜுங்கா’ படப்பிடிப்புக்காக பிரான்ஸில் இருக்கும் விஜய் சேதுபதி, இன்னும் ஒரு வாரத்தில் சென்னை திரும்புகிறார் என்கிறார்கள்.


 


கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் படம் ‘ஜுங்கா’. ஹீரோயினாக சயிஷா நடிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி நடிக்க, பாரீஸில் பிறந்து வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார். இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில வாரங்களாக பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் பிரான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிய இருக்கிறதாம். எனவே, ஒரு வாரத்தில் சென்னை வந்துவிடுவார் விஜய் சேதுபதி என்கிறார்கள்.