வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:41 IST)

வெயிட் குறைக்கிறாரா விஜய் சேதுபதி?

16 வயது கேரக்டருக்காக தனது உடல் எடையைக் குறைக்கப் போகிறார் விஜய் சேதுபதி என்கிறார்கள்.
 


 

வெள்ளையாக இருக்க வேண்டும், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாற்றி ‘சூப்பர் ஸ்டார்’ ஆனவர் ரஜினி. தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதியும் அப்படித்தான். கொடுத்த கேரக்டரை சிறப்பாகச் செய்யும் விஜய் சேதுபதி, உடல் எடையை ஏற்றி, இறக்குவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை. அதற்கு அவருக்கு நேரமும் இல்லை. காரணம், வருடத்துக்கு ஏழெட்டு படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், முதன்முறையாக ஒரு படத்துக்காக உடல் எடையை குறைக்கப் போகிறார் என்கிறார்கள். பிரேம்குமார் இயக்கும் ‘96’ படத்தில், 16, 36, 96 வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். 16 வயதில் நடிக்க விஜய் சேதுபதி தோற்றத்தில் எந்தப் பையனும் கிடைக்காததால், அவரே நடிக்கிறார். பள்ளி மாணவனான இந்த வேடத்துக்காக, உடல் எடையைக் குறைத்து நடிக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.