செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (18:08 IST)

எல்லாம் முடிஞ்சிட்டு சார்.. அவ்ளோதான் கிளம்புங்க! – விரக்தியில் பேசிய விஜய் சேதுபதி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைந்ததற்கு இரங்கல் தெரிவிக்க வந்த விஜய் சேதுபதி “800” படத்திலிருந்து வெளியேறியதை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியை படத்திலிருந்து விலகி கொள்ள அறிவுறுத்தி முரளிதரன் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்து “நன்றி.. வணக்கம்” என கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் நினைவஞ்சலியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம். இனி அதை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.. விடுங்க” என விரக்தியாய் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.