1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (17:43 IST)

நாசருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்!!

நடிகர் விஜய் நடிகர் நாசரின் வீட்டிற்கு சென்று அவரது மகனை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்து ஒன்றில் நடிகர் நாசரின் மகன் பைசல் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
 
தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், விஜய் அவரை சந்தித்து நலம் விசாரித்து, அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துள்ளார். 
 
சில வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வை நினைவில் வைத்துக்கொண்டு இதனை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பழைய நினைவுகளை புதுபித்துள்ளார் நாசர்.