திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:23 IST)

விஜய்யின் கோட் படத்தலைப்பில் சனாதனம்… விசிக எம் பி கண்டனம்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தற்போது படம் இரண்டு காட்சிகளைக் கடந்து ஓடிவரும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஆஹோ ஓஹோவென்று புகழ்வதும் பொதுவான ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சொல்வதும்தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களவை உறுப்பினரான ரவிக்குமார் கோட் படத்தலைப்பு குறித்து கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 'காலமெல்லாம் பெரியது இதுதான்' என்றால் காலம் மாறினாலும்

'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)" எனக் கூறியுள்ளார். ஒரு தலைப்புக்கு இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணி கருத்து சொல்லனுமா என பலரும் அவருக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.