1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (10:51 IST)

அக்டோபர் 12 ஆம் தேதி லியோ படத்தின் ப்ரி ரிலீஸ் விழா… ஆனால் விஜய் கலந்துகொள்வாரா?

நேற்று முன் தினம்  வெளியான விஜய்யின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஆக்‌ஷன் விருந்தை இந்த டிரைலர் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

படத்தின் சென்சார் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், படத்தின் இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் மட்டும் இப்போது நடந்து வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்காததால் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றை துபாயில் அக்டோபர் 12 ஆம் தேதி நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் அனிருத், இயக்குனர் லோகேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் ஆனால் விஜய் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.