கோட் படத்தின் அடுத்த பாடல் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கோட் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சென்று சந்தித்தனர்.
இந்நிலையில் கோட் பட ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் மந்தமாக செல்கிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு, “கோட் திரைப்படம் அனைத்து அம்சங்களும் உள்ள படம், ரசிகர்கள் எதிர்பார்க்கும் கோட் படத்தில் இருக்கும். ஒரு செம்ம பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளது.” எனக் கூறியுள்ளார்.