1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 ஜூன் 2016 (15:01 IST)

ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்

கேரளா ரசிகரின் கடைசி ஆசையை, நடிகர் விஜய்  நிறைவேற்றினார்.


 

 
தமிழகம் மட்டும் அன்று கேரளாவிலும் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் விஜய் தான். கேரளாவில் விஜய் படம் வெளியானாலே மற்ற நடிகர்களின் படம் வெளிவர தயங்கும், அந்த அளவிற்கு வெறிதனமான ரசிகர்களை கொண்டவர் விஜய்.
 
கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றம் துவங்கப்பட்ட நாளில் இருந்து செயல்பட்டு வரும் இளைஞன் நிதின் என்பவருக்கு நோய் தாக்கப்பட்டு, அவரது கண் பார்வை குறைந்து வருகிறது.
 
இந்நிலையில் நிதின், தனது கண் பார்வை முழுவதையும் இழப்பதற்கு முன் விஜய்யை ஒருமுறை பார்த்து பேச வேண்டும் என்பதே. இதற்காக அவரது நண்பர்கள் பலமுறை விஜய்யை சந்திக்க முயற்சி செய்தனர். இந்த செய்தி அண்மையில் தான் விஜய்க்கு தெரியவந்தது, உடனே நிதினை சென்னைக்கு வரவழைத்து அவருடன் நீண்ட நேரம் செலவிட்டார்.
 
மேலும் அவரது கண் சிகிச்சைக்கு என்ன செலவானாலும் செய்துவிடலாம் என்று விஜய் கூறியுள்ளார்.