1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (09:08 IST)

இல்ல.. எனக்கு புரியல..! – பீஸ்ட் விமான காட்சியை கிண்டல் செய்த விமானப்படை அதிகாரி!

விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் வரும் க்ளைமேக்ஸ் விமான சண்டை காட்சியின் லாஜிக் மீறல் காட்சிகள் குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸில் வரும் விமான சண்டை காட்சிகளை பார்த்த விமானப்படை அதிகாரி சிவராமன் சஜன் தனது ட்விட்டரில் அந்த வீடியோவை பகிர்ந்து “எனக்கு இதில் நிறைய கேள்விகள் உள்ளது” என பதிவிட்டிருந்தார்.

இதுதான் சாக்கு என காத்திருந்த பலர் அதன் லாஜிக் மீறல்களை கிண்டல் செய்ய தொடங்க நேற்று முதல் மீண்டும் பீஸ்ட் வைரலாகி வருகிறது. இந்நிலையில் களமிறங்கிய விஜய் ரசிகர்கள் பலர் இந்தி சினிமாவில் இருந்த லாஜிக் மீறல் காட்சிகளை எடுத்துப்போட்டு “இதையெல்லாம் எந்த லாஜிக்ல எடுத்தீங்க” என பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் சோசியல் மீடியாவே பரபரப்பாக காணப்பட்டுள்ளது.