1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (21:28 IST)

2017-ல் தளபதி ஆட்சி. விஜய் ரசிகர்களின் ரகசிய கூட்டம்

இளையதளபதி விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறிய அவரது தந்தை எஸ்.ஏ.சி, பின்னர் திடீரென அந்த கருத்தை மாற்றி அரசியலுக்கு வருவதும் வராததும் விஜய்யின் விருப்பம் என்று கூறினார்.



 


உண்மையில் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறியவே எஸ்.ஏ.சி அந்த அறிக்கையை வெளியிட்டதாகவும், எதிர்பார்த்ததுபோலவே விஜய் ரசிகர்கள் எஸ்.ஏ.சியின் கருத்தால் ஆதங்கப்பட இதுதான் சமயம் என விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இப்போது இருக்கும் ஒரே குழப்பம், தனிக்கட்சியா அல்லது பாஜகவிடம் இணைவதா? என்பது தானாம். இதற்காக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரகசிய கூட்டம் போட்டு ஆலோசனை செய்து வருவதாகவும், ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கண்ட இரண்டில் ஒரு முடிவை விஜய் எடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தமிழகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் 2021ல் தளபதி ஆட்சிதான் என்று தகவலை பரப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.