செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:21 IST)

பீஸ்ட் படத்துக்கு கூடுதல் ஆர்வம்! ரூல்ஸ் எல்லாம் தூக்கிப்போட்டு இறங்கிய விஜய்!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் நிலையில் தனது நிபந்தனைகளை எல்லாம் ஒத்திவைத்துள்ளாராம்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டு உள்ளன. அதை முன்னிட்டு இப்போது படத்தில் மூன்று வில்லன்களாக செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் டான்ஸிங் ரோஸ் புகழ் ஷபீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் சில காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் ஆர்வமாக நடித்து வருகிறாராம். வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடிக்காத விஜய் மாதத்துக்கு 25 நாட்கள் தேதிகள் கொடுத்து நடித்து வருகிறாராம். இப்படி போனால் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே இந்த படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.