1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2017 (17:26 IST)

ஒவ்வொரு முகத்துக்கும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த விஜய்

அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் விஜய், இந்தப் படத்துக்காக மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். 


 

 
அட்லீ இயக்கும் படத்தில் மூன்று விதமான கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். அப்பா மற்றும் இரு மகன்கள் என விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களும் ஏற்கனவே வெளியாகி விட்டன. விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கின்றனர். 
 
‘மூன்று முகம்’ என்ற டைட்டில் தான் இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல், மொத்தம் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் விஜய். அதாவது, ஒரு முகத்துக்கு 40 நாட்கள் என, மூன்று முகத்துக்கும் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் விஜய்.