திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (10:16 IST)

விஜய், அட்லி படம்... லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 
இந்தப் படத்தில் நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் முக்கியமான வேடத்தில்  நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்யுடன் இவர் நடித்த திருமலை, குஷி படங்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு இசையமைக்க ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேனாண்டாள்  பிலிம்ஸின் 100 -வது படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பது முக்கியமானது.
 
முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய பின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்கு அமெரிக்கா செல்ல படக்குழு  திட்டமிட்டுள்ளது.