விஜய், ஆர்யாவை தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரரான கருப்பன்!

Sasikala| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (17:05 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜல்லிக்கட்டு வீரர் கெட்டப் இருந்தது விஜய்க்கு.  இதனால் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கிறார் என தெரிகிறது. இதற்கு ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை என்று தொடர்ந்து முழக்கமிட்டு வரும் தமிழக இளைஞர்கள் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தினை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளனர்.

 
இந்நிலையில் ரேணிகுண்டா படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் கருப்பன். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் விஜய்சேதுபதி காளையை அடக்குவது போன்று இடம்பெற்றுள்ளது. ஆக விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதை கருப்பன் போஸ்டர் உறுதிபடுத்தியுள்ளது.
 
கருப்பன் படத்தினை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, காவேரி, சரத் லோகிதாஸ்வா எனப் பலர் நடித்துள்ளனர்.
 
விஜய், விஜய்சேதுபதியை தொடர்ந்து சந்தனதேவன் படத்தில் ஆர்யாவும் ஜல்லிக்கட்டு வீரராக நடித்து வருவது என்பது  குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :