1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (13:24 IST)

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே மெட்ரோ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் கடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் செப்டம்பர் 17ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
மேலும் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் திரையரங்குகள் தான் இந்த படம் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது