சுனைனாவுக்கு மீண்டும் ஒரு 'நாக்குமுக்கா' கிடைக்குமா?


sivalingam| Last Modified வெள்ளி, 21 ஜூலை 2017 (22:42 IST)
நடிகை சுனைனா அறிமுகமான படம் 'காதலில் விழுந்தேன். இந்த படத்தின் ஹைலைட்டே 'நாக்கு முக்கா' பாடல்தான். இந்த பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால்தான் இந்த படமும் ஓரளவுக்கு சுமாராக ஓடியது. எனவே உண்மையில் இந்த படத்தின் ஹீரோ இந்த படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என்றுதான் அப்போது விமர்சிக்கப்பட்டது. 


 
 
இந்த நிலையில் மீண்டும் சுனைனாவும் விஜய் ஆண்டனியும் ஒரு படத்தில் இணைகின்றனர். ஆனால் இந்த படத்தில் இவர்கள் இணைவது நடிகை, இசையமைப்பாளராக இல்லை. நாயகன், நாயகியாக. ஆம் கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள 'காளி' படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், சுனைனா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனி என்பதால் மீண்டும் ஒரு நாக்கு முக்கா பாடலை அவர் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த படத்தில் சுனைனாவை தவிர மேலும் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களுடைய பெயர்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :