ஜனவரியில் விஜய், அட்லி படம்?
அடுத்தடுத்த இரண்டு ஹிட்கள் கொடுத்த அட்லி மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளதால் திரையுலகம் அவர்கள் இணையும் படத்தை எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகிறது.
இந்தப் படம் அண்ணாமலை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று செய்தி அலையடிக்கிறது. எதுவாக இருந்தாலும் அட்லி ஹிட்டாக்கிவிடுவார் என்ற நம்பிக்கை விஜய் ரசிகர்களுக்கு இருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்க அட்லி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சரி, ஹீரோயின்...?
நயன்தாரா என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.