1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (09:42 IST)

விஜய்-வம்சி கூட்டணி படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்! வெளியான தகவல்!

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

பீஸ்ட் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான செட அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்துக்கான ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.