1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 மார்ச் 2021 (08:50 IST)

மீண்டும் தள்ளிப்போகும் விஜய் 65 படப்பிடிப்பு… ரிலிஸ் தேதியிலும் மாற்றம்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதுவரை நெல்சன் அவர் இயக்கி முடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாராம். அதை முடித்து வந்து மீண்டும் விஜய் படத்தின் வேலைகளை தொடங்கி படப்பிடிப்புக்கு செல்ல எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.