சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய வேணு அரவிந்த்!
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கடந்த 30 வருடங்களாக நடித்து வருபவர் வேணு அரவிந்த். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகிய பின்னர் மூளையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்து மூளைக்கட்டி அகற்றப்பட்ட பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
இதுபற்றிய செய்தி வெளியானதும் அவரின் ரசிகர்களும் சக கலைஞர்களும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தித்தனர். இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ள அவர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளாராம்.