1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2015 (11:27 IST)

புதுப்பொலிவுடன் வெளியாகும் வீரபாண்டிய கட்டபொம்மன்

1959 -ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. ஆங்கிலேயரை எதிர்த்து தூக்குமரம் சென்ற கட்டபொம்மனின் வாழ்க்கைக்கதையான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
 

 
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனங்கள் இந்த தலைமுறைக்கும் மனப்பாடம். சிவாஜி கணேசனுக்கு ஆப்ஃரோ ஆசியன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுத் தந்த இந்தப் படத்தை சாய் கணேஷ் பிலிம்ஸ் புதிய தொழில்நுட்பத்தில் மெருகேற்றி வெளியிடுகிறது.
 
விரைவில் வீரபாண்டியனின் வாழ்க்கையை ரசிகர்கள் மீண்டும் திரையில் கண்டு களிக்கலாம்.