செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (13:55 IST)

கிராமத்தைப் பாதுகாக்கும் சூப்பர் ஹீரோ! எப்படி இருகு ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’?

சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. சமீபத்தில் ரிலீஸான அவரின் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தின் டிரைலரை வைத்து இது மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன மின்னல் முரளி படத்தின் காப்பி போல இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் படக்குழு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் பாதியில் ஜாலியாகவும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆக்‌ஷன் கலந்தும்  வழக்கமான மசாலா சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். சூப்பர் ஹீரோவோடு சேர்த்து ஊரின் காவல் தெய்வ செண்ட்டிமெண்ட்டையும் கலந்துகொடுத்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது வீரன் என சொல்லப்படுகிறது.