1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (17:45 IST)

ஒரு நல்ல க்ரைம் கதை சொல்லட்டா..? – வீரமே வாகை சூடும் ட்ரெய்லர்!

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். யோகி பாபு, பாபுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது.

இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் வகையிலான இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் வரும் மிருக உவமை வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.