திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (16:55 IST)

’வீரமே வாகை சூடும்’ நாயகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

நடிகர் விஷால் நடித்து முடித்துள்ள வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை நாயகிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் தற்போது மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரமுகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த டிம்பிள் ஹயாத்தி என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் மற்றபடி நலமாக இருப்பதாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார் 
 
மேலும் அவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகை டிம்பிள் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.