இந்துஸ்தானை விரும்பும் அனைவரும் இந்துக்களே: ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் ரிலீஸ்..!
சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர் என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்தமானில் உள்ள காலாபாணி சிறையில் சாவர்க்கர் நடந்து செய்யும் காட்சி, அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்று பின்னணியில் வரும் வாய்ஸ் ஓவரோடு, சிறையில் சாவர்க்கர் பட்ட துன்பங்கள், மகாத்மா காந்தியிடம் வீரசவர்க்கார் பேசும் ஆவேசமான வசனங்கள் ஆகியவை இந்த படத்தின் ட்ரைலரில் உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர் படம் ஹிந்தி மற்றும் மராத்தியர் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.