செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:29 IST)

வடசென்னைக் கதையைப் படமாக எடுக்கும் வசந்தபாலன்

3 வருடங்களாகப் படமெடுக்காமல் இருந்த வசந்தபாலன், அடுத்ததாக வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட படத்தை எடுக்கப் போகிறார்.



 
மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய படங்களாக எடுப்பவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காவியத் தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றாலும், கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. இதனையடுத்து 3 வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காத வசந்தபாலன், தற்போது அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளார். வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகையர் தேர்வு முடிந்தபின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.