1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (18:20 IST)

முன்னாள் காதலி… இப்போ வில்லி!

விஷாலின் முன்னாள் காதலியான வரலட்சுமி சரத்குமார், ஒரு படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்கப் போகிறார்.


 

 
விஷால், மீரா ஜாஸ்மின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சண்டக்கோழி’. 12 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. விஷால் ஹீரோவாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தில், விஷாலுக்கு வில்லியாக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் வரலட்சுமி. காதலர்கள் என்று சொல்லப்பட்ட விஷால் – வரலட்சுமி இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடிப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரியா ரெட்டியைத்தான் திருமணம் செய்து கொண்டார், விஷாலின் அண்ணனான விக்ரம் கிருஷ்ணா. ‘சண்டக்கோழி’யில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமியைத்தான் விஷால் திருமணம் செய்து கொள்வார் என்று பேசிக் கொள்கிறார்கள்.