1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (12:40 IST)

4வது கல்யாணமா? கழுத்தில் பணமாலையுடன் வனிதா வேண்டுதல்!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
 
அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி வாலிப வயதில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் நேரத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டு  சர்ச்சையில் சிக்கினார். வெகு சீக்கிரமே அந்த நபரையும் துரத்தி அடித்துவிட்டு மண வாழக்கையை இழந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் மகளுடன் கழுத்தில் பணமாலை அணிந்துக்கொண்டு பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதை பார்த்த பலரும் 4வது புருஷன் நல்லவனா வரணும்னு வேண்டுறீங்களா ஆண்டி? என பங்கமாக கிண்டலடித்துள்ளனர்.