1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (18:18 IST)

நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எளிமையானவர் விஜய்… இயக்குனர் கருத்து!

இயக்குனர் வம்சி பைடிபள்ளி விஜய்யை சந்தித்து கதை சொன்ன விதம் பற்றிக் கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள வம்சி  வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில் சமீபத்தில் வம்சி அளித்த ஒரு நேர்காணலில் விஜய்யை சந்தித்து கதை சொல்லி அவரிடம் சம்மதம் வாங்கியது குறித்து பேசியுள்ளார். அதில் ‘விஜய் 66 திரைப்படம் ஒரு தமிழ்ப்படம்தான். தெலுங்கிலும் வெளியாகும். விஜய்யை சந்திக்க தில்ராஜு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக்கொடுத்தார். விஜய் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தேன். அவர் என்னிடம் பேசிய விதம், கதை கேட்ட விதம் என்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு எளிமையானவராக இருக்கிறார். இயக்குனர்களுக்கு மிகவும் சௌகரியம் கொடுப்பவர் விஜய்.’ எனக் கூறியுள்ளார்.