திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (12:56 IST)

திட்டமிட்டபடி 3 மொழிகளில் வலிமை! – சொன்ன தேதியில் வெளியாகிறது!

அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாவதை தயாரிப்பு நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்களால் தீவிரமாக எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி வருகிறது.

வலிமை பொங்கலுக்கு வெளியாவதாக போனிகபூர் அறிவித்திருந்தார். தற்போது ஒமிக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும் பல்வேறு தடைகள் இருப்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளன.

இந்நிலையில் அஜித் நடித்துள்ள வலிமை மட்டும் திட்டமிட்டபடி ஜனவரி 13ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்த விளம்பரங்களை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ரிலீஸை உறுதிபடுத்தியுள்ளது