ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:36 IST)

டுவிட்டரில் டிரெண்ட் ஆன ‘வலிமை மோஷன் போஸ்டர்’ ஹேஷ்டேக்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் டுவிட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர் 
 
ஆனால் ரசிகர்களின் கோரிக்கைக்கு இதுநாள் வரை பதில் இல்லை என்பதும் கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் தகுந்த நேரத்தில் ’வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்று அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அஜித் ரசிகர்கள் இன்று ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றனர். ’வலிமை’ படம் மோஷன் போஸ்டர் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் படக்குழுவினர்களிடம் இருந்து வராத நிலையில் திடீரென இந்த ஹேஷ்டேக் எதனால் ட்ரெண்டாகி வருகிறது என்பது புரியாமல் அஜித் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்
 
இந்த நிலையில் இது ஒரு அதிகாரபூர்வமற்ற ஹேஷ்டேக் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது