1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:12 IST)

பொன்னியின் செல்வனில் வைரமுத்து… 12 பாடல்களை எழுதியது இவர்கள்தான்!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து ஒரு பாடலைக் கூட எழுதவில்லையாம்.

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தை முக்கியமான அப்டேட்டாக கதாபாத்திர அறிமுகம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அப்டேட் ஆகியவையும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரோஜா படத்துக்குப் பிறகு மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் பாடல்கள் எழுதும் வைரமுத்து இந்த படத்தில் ஒரு பாடலைக் கூட எழுதவில்லையாம். அவருக்கு பதிலாக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், கபிலன் வைரமுத்து மற்றும் கீதா வெண்பாயன் ஆகியோர்தான் மொத்தமுள்ள 12 பாடல்களையும் எழுதியுள்ளனராம். இதில் இளங்கோ கிருஷ்ணன் மட்டும் 8 பாடல்களை எழுதியுள்ளாராம்.