புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (15:11 IST)

மீண்டும் வடிவேலு!! சினிமாவில் சிங்கம் களமிறங்கிருச்சு!!!

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்ட் நீக்கப்பட்டர்தை தொடர்ந்து சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு. 
 
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 
வடிவேலு புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. 
 
இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு  2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வடிவேலு மீண்டும் நடிக்கவுள்ளார். 
 
இது குறித்து வடிவேலு கூறியதாவது, மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. சினிமாவில் இது எனக்கு மறுபிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்கவுள்ளேன். 
 
தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு அடுத்து காமெடியானாகவும் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.