1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 18 செப்டம்பர் 2021 (09:41 IST)

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்… போட்டிக்கு வடிவேலு வைக்கும் தலைப்பு!

நாய் சேகர் என்ற தலைப்புக்காக வடிவேலு மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இடையே போட்டி நடந்தது.

பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதையும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப் படத்தில் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்தில் சன்னி லியோன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்காக பொருத்தமாக இருக்கும் என நாய்சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால் வடிவேலுவின் முத்திரைக் கதாபாத்திரமான நாய் சேகரை வைத்து இப்போது சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்த படத்துக்காக அந்த தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனத்தினரிடம் வடிவேலு சார்பாக கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்து நாய்சேகர் என்று தலைப்பை அறிவித்து முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான வடிவேலு தனது படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பு வைக்கலாம் என சொல்லியுள்ளாராம். இதனால் விரைவில் அந்த தலைப்பும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.