நாடக மேடையில் வடிவேலு – மழை வேண்டித் திருவிழா !

Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (11:09 IST)
நடிகர் வடிவேலு சினிமாவை ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு தனது குடும்பத்தோடு இப்போது அதிக நேரம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் வடிவேலுவை சுற்று இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பிரச்சனை சுற்றிவர, அவரோ ஜாலியாகக் குடும்பத்தோடு கோயில் குளம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் சிவகங்கை மாவட்டம் கலியாந்தூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

இந்த திருவிழா நடத்தினால் மழை வரும் என்பது அந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த திருவிழாவின் ஒருப்பகுதியாக நடத்தப்பட்ட வள்ளித்திருமணம் நாடகத்தை வடிவேலு தொடங்கி வைத்து ‘இளைஞர்கள் மழைத்தண்ணீரை சேமிக்க முன்வரவேண்டும்’ எனக் கூறினார்.

வடிவேலு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதுபோன்று ஊர்களில் நடத்தப்படும் நாடகங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :