செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2017 (16:40 IST)

வடிவேலுக்கு காமெடி பயம்; தாடி பாலாஜி

வடிவேலு தற்போது நடித்து முடித்த பின் அருகில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். அவரது காமெடி மீது அவருக்கே பயம் வந்துவிட்டது என தாடி பாலாஜி கூறியுள்ளார். 


 

 
வடிவேலுவின் காமெடி கூட்டணியில் ஒருவரான நடிகர் பாலாஜி சில காலமாக டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். வெகு காலம் கழித்து வடிவேலு காமெடியனாக நடித்த கத்திச் சண்டை படத்தில் பாலாஜி அவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் வடிவேலு தற்போது நடித்து வருவது குறித்து பாலாஜி கூறியதாவது:-
 
அவர் நடிக்கும் பல படங்களில் எனக்கு காமெடி வாய்ப்பு கொடுத்தவர் வடிவேலு. அவர் ஹீரோவானது என்னைப்போன்றவர்களுக்கு இழப்புதான். இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் பிஸியாக போய் கொண்டிருக்கிறது.
 
முன்பெல்லாம் வடிவேலு ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த காட்சி குறித்து மற்றவர்களிடம் கருத்தே கேட்க மாட்டார். ஆனால் இப்போது நடித்து முடித்ததும் எப்படி இருக்கு? என்று அருகில் உள்ளவர்களிடம் கருத்து கேட்கிறார். காரணம் காமெடி சரியாக வந்துள்ளதா என்ற சந்தேகம். அவருக்கு, அவர் காமெடி மீதே சந்தேகம் வந்துவிட்டது என்றார்.