வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (09:26 IST)

வடிவேலுவின் உதவியாளர் கொலை மிரட்டல்! – தயாரிப்பாளர் புகார்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் வடிவேலு. அதிக படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி போன்ற படங்களின் மூலம் நகைச்சுவை நாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் தற்போது பல்வேறு பிரச்சினைகளால் படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் வடிவேலுவை வைத்து ‘எலி’ படத்தை தயாரித்த மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் சதீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். வடிவேலுவை வைத்து சதீஷ் தயாரித்த எலி படத்தில் 9 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இவருக்கும், வடிவேலு தரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் சதீஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் என்பவர்  ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோவிந்தராஜ் என்பவரையும் தாக்கியுள்ளார். இதனால் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.