டெல்லி பல்கலைக் கழகத்தில் பாடமாகிறது விஜய் படம்?
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படம், டெல்லி பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
பிரபல எழுத்தாளரான சேத்தன் பகத் எழுதிய நாவல் ‘பைவ் பாயிண்ட் சம் ஒன்’. இந்த நாவலைத் தழுவி, ஆமீர் கான் நடிப்பில் ‘3 இடியட்ஸ்’ படம் எடுக்கப்பட்டது. அதை, விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் நடிப்பில் ‘நண்பன்’ என தமிழில் ரீமேக் செய்தார் ஷங்கர்.
அந்த நாவலை, டெல்லி பல்கலைக் கழகத்தின் இலக்கியப் பிரிவில் பாடமாக வைக்கப்பட இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், அதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சேத்தன் பகத்தின் மற்றுமொரு நாவலான ‘ஹாஃப் கேர்ள்பிரண்ட்’ நாவலும், இதே பெயரில் படமாகியிருக்கிறது. அர்ஜுன் கபூர், ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள இந்தப் படம், அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.