1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 8 ஜூன் 2016 (11:14 IST)

அமெரிக்காவில் ஆக்ஷன் காட்சிகளுடன் தொடங்கும் சபாஷ் நாயுடு

அமெரிக்காவில் ஆக்ஷன் காட்சிகளுடன் தொடங்கும் சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்குகிறது. கமல், பிரம்மானந்தத்தின் துரத்தல் காட்சியுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


 
 
தசாவதாரத்தில் நாயுடு கமலின் உதவியாளராக நடன இயக்குனர் ரகுராம் நடித்திருந்தார். சபாஷ் நாயுடு படத்தில் அந்த வேடத்தை ஏற்றிருப்பவர் பிரம்மானந்தம். கமலும், பிரம்மானந்தமும் இடம்பெறும் துரத்தல் காட்சியை முதலில் படமாக்குகின்றனர். இதற்காக ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.
 
சபாஷ் நாயுடு படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. ஸ்ருதி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்