1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (11:32 IST)

விஜய் 60 - இதுவரை முடிந்தது என்ன?

விஜய் 60 - இதுவரை முடிந்தது என்ன?

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம், விஜய்யின் 60 -வது படமாகும். விஜயா வாஹினி ஸ்டுடியோ இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.



இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. அதில் என்னென்ன படமாக்கப்பட்டன?

சில வசனக் காட்சிகளுடன் ஒரு கல்யாண பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இந்தப் பாடல் காட்சியில் விஜய் அசத்தல் நடனம் ஆடியுள்ளார். அத்துடன் அனல் அரசு இயக்கத்தில் ஒரு சண்டைக் காட்சியையும் படமாக்கியுள்ளனர். வித்தியாசமானமுறையில் இந்தச் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவிக்கிறது.

இந்த இரண்டுகட்ட படப்பிடிப்பின் காட்சிகளையும் எடிட் செய்துவிட்டனர். அக்டோபரில் படப்பிடிப்பு முடிந்தாலும், படம் அடுத்த வருட பொங்கலுக்கே திரைக்கு வருகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்