புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 10 ஜூன் 2017 (18:03 IST)

இரண்டு கெட் அப்பில் கலக்கும் மலையாள வில்லன் விஷால்

மலையாள இயக்குனர் உண்ணி கிருஷ்ணன் இயக்கத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் படத்தில் விஷால் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கு வில்லன் என பெயரிட்டுள்ளனர்.

 
இப்படத்தில் விஷாலுக்கு வில்லன் வேடம். தற்போது இந்த படத்தில் தாடி வைத்து கண்ணாடி அணிந்து இரண்டு கெட் அப்பில்  விஷால் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ராக்லைன்  வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். சிறிய வேடத்தில் வந்தாலும் இது முக்கியமான பாத்திரம் என்று கூறப்படுகிறது.