வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 6 மே 2017 (17:13 IST)

ஹீரோயின் அழகுக்காக ரூ. 2 கோடி செலவழித்த இயக்குநர்

சமீபத்தில் வெளியான பிரமாண்டமான படத்தில், ஹீரோயின் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக 2 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் இயக்குநர்.


 
 
படத்தில் தேவசேனாவாக நடித்திருந்த அந்த நடிகை, இன்னொரு படத்துக்காக ஏகப்பட்ட எடை கூடினார். ஆனால், ஏறிய எடை இறங்குவேனா என்று வருடக் கணக்கில் அடம்பிடித்து வருகிறது. இத்தனைக்கும் அந்த நடிகை யோகா டீச்சர் வேறு. அவராலேயே உடம்பைக் குறைக்க முடியவில்லை.

ஆனால், கதைப்படி இளவரசியாக நடிக்கும் அவர், அதற்கான உடலமைப்போடும், அழகோடும் இருக்க வேண்டும். நடிகையைப் பார்த்தால் அவருக்கு அம்மா வேடத்தில் நடிப்பவர் போல் இருந்தார். அதற்காக, அவர் எடையைக் குறைக்கும்வரை காத்திருக்க முடியுமா?

குண்டு உடம்போடு காட்சிகளைப் படம்பிடித்து, கிராஃபிக்ஸ் மூலம் ஒல்லியாகவும், அழகாகவும் மாற்றி விட்டார்களாம். இதற்காக முழுதாக 2 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகரான ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம்தான் இந்த வேலையைச் செய்து கொடுத்ததாம்.