1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (10:21 IST)

முதன்முறையாக தனுஷ் படத்திற்கு முதன்முறையாக ட்விட்டரில் எமோஜி!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புதிய எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை வாங்கியுள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் ஜூன் 18 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை 17 மொழிகளில் டப் செய்து ஒரே நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்திற்கு புதிய எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. படத்தில் நீண்ட மீசை வைத்து கூளிங் கிளாஸ் போட்டு தனுஷ் வருவார். அதுபோலவே இந்த எமோஜியும் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக காலா, மாஸ்டர், சூரரை போற்று போன்ற படங்களுக்கு ட்விட்டர் எமோஜி வெளியிட்ட நிலையில் தனுஷ் படத்திற்கு வெளியிடுவது இதுவே முதல்முறை.