வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (08:08 IST)

விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க மறுக்கிறார்களா நடிகைகள்? இதுதான் காரணமா!

பலு தூக்கும் வீராங்கனையான மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய சினிமாவிலேயே இப்போது பயோபிக் படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. அரசியல்வாதிகள், பல்வேறு துறை சாதனையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரின் பயோபிக்குகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் பளுதூக்கும் வீராங்கனையான மல்லேஸ்வரியின் பயோபிக்கும் உருவாக உள்ளது.

இதற்காக நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் இந்த கதாபத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகளும் மறுத்துள்ளனர். அதற்கான காரணம் பளு தூக்கு வீராங்கனை போல உடலை மாற்ற பல மாதங்கள் தேவைப்படும். அதனால் பல படங்களின் வாய்ப்பை இழக்க நேரிடும் என சொல்கிறார்களாம். இதனால் இப்போது புதுமுக நடிகைகளை தேர்வு செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது.