1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (17:22 IST)

இந்த வருடமே சண்டக்கோழி 2 - பொறுமையால் சாதித்த லிங்குசாமி

இந்த வருடமே சண்டக்கோழி 2 - பொறுமையால் சாதித்த லிங்குசாமி

இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் சண்டக்கோழி 2 படம் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் தொடங்கப்படும் என திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார். 


 
 
சண்டக்கோழி 2 படத்தை விஷால் தயாரித்து நடிப்பதாக இருந்தது. லிங்குசாமி இயக்கம். ஆனால், கடைசி நேரத்தில் சண்டக்கோழி 2 படத்தை விட்டு, தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்தார் லிங்குசாமி. இதனால் அதிர்ச்சியான விஷால், 14 மாதங்கள் லிங்குசாமிக்காக காத்திருந்தேன் என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர்மீது புகார் கூறினார். மேலும், சமூகவலைத்தளங்களில் லிங்குசாமியை பெயர் குறிப்பிடாமல் சாடியிருந்தார். லிங்குசாமி விஷாலின் எந்த நடவடிக்கைக்கும் பதிலளிக்கவில்லை. 
 
பொறுமைக்கும் புன்னகைக்கும் உதிராத கோபம் ஏது? 
 
லிங்குசாமியும், விஷாலும் சமீபத்தில் சந்தித்து உரையாடினர். மனஸ்தாபங்களை அப்போது கழுவி கடாச்சியவர்கள், சண்டக்கோழி 2 படத்தை எடுப்பது என முடிவு செய்தனர். இது குறித்து ஏற்கனவே நாம், சமாதானமான சண்டக்கோழிகள் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸும் அதனை உறுதி செய்துள்ளார். 
 
இந்த மாத இறுதியில் அல்லு அர்ஜுன் படம் தொடங்கும். இன்னும் மூன்று நான்கு மாதங்கள் கழித்து சண்டக்கோழி 2 படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.