1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (18:06 IST)

விவேகம் கதை இதுதானா...?

அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் விவேகம் படம் குறித்து திரையுலகில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழின் முதல் ஹைடெக் ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று யூகங்கள் சுழற்றியடிக்கின்றன.

 
இந்திய உளவுத்துறையின் ரகசிய ஏஜென்டான அஜித் தனது உதவியாளர் அக்ஷரா கடத்தப்பட்டதை கண்டுபிடிக்க கிளம்புகிறார். அப்போது அவர் சர்வதேச சதி ஒன்றை கண்டறிந்து அதனை முறியடிப்பதே படத்தின் கதை என்று சமீபமாக ஒரு தகவல்  உலவுகிறது.
 
காஜல் அகர்வால் நாயகியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துவரும் இந்தப் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு  வெளிநாட்டில் நடத்தப்பட்டது.
 
அனிருத் இசையமைத்துள்ளார்.